செவ்வாய், 22 ஜூலை, 2025
அலெக்ஸாண்ட்ரியா நூலகம்
எகிப்தில் இருந்த மிகப் பெரிய நூலகம் அலெக்ஸாண்ட்ரியா. கடந்த கால வரலாற்று இரகசியங்கள் அங்கு பாதுகாக்கப்பட்டு குவிந்திருந்தன. பிற்காலத்தில் இஸ்லாமிய மதவாதிகளால் அது எரிக்கப்பட்டது. ஆறு மாத காலம் ஆனது அந்த நூலகம் முற்றாய் எரிந்து முடிய. இந்நூலகம் இருந்த இடம் எகிப்தில் இருந்த அட்லாண்டிஸ் எனும் மாபெரும் கண்டம். இக்கண்டம் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிவிட்டது.
வெள்ளி, 18 ஜூலை, 2025
தவளை ராஜகுமாரி / thavalai rajakumari
காலங்களுக்கு முன் ரஷ்யாவில் ஒரு ஜார் அரசர் மூன்று மகன்களோடு இருந்தார். தமக்கு முற்றி வரும் மூப்புக்கு முன்னதாக தமது மகன்களுக்கு மணம் முடித்து வைத்து பேரப் பிள்ளைகளைக் கண்ணுற விரும்பினார். தமது மகன்களை அழைத்து விருப்பத்தைக் கூற, அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஜார் அரசர், 'தம் மகன்கள் ஒவ்வொருவரும் திறந்தவெளியில் இருந்து ஓர் அம்பை எய்த வேண்டும். அந்த அம்புகள் எங்கே போய் விழுகிறதோ அங்கே அந்த அம்பை எய்தவனுக்குரிய மணமகள் கிடைப்பாள்' எனக் கூறினார். மகன்கள் 'சரி' என்றனர். பின்னர் தந்தையை வணங்கி திறந்தவெளி சென்றனர்.
முதல் ஜரேவிச் (அரசகுமாரன்) வில்லில் நாணேற்றிக் கணை தொடுத்து எய்ய அவ்அம்பு சென்று விழுந்த இடம் ஒரு நிலப்பிரபுவின் வீட்டு வெளி முற்றம். அதை நிலப்பிரபுவின் மகளான இஸ்வரியாவிச்சி என்ற பெயருடையவள் எடுத்து வைத்துக் கொண்டாள்.
இரண்டாம் ஜரேவிச் எய்த கணை ஒரு பெரும் பணக்கார வணிகருடைய இல்லத்து வெளி முற்றத்தில் விழ, அதை வணிகர் மகளான இனுஷ்காரினா எடுத்துக் கொண்டாள்.
இப்போது, மூன்றாவது அரசகுமாரன் இவான் ஜரேவிச் விடுத்த கணை உயரத் தாவிப் பறந்து சென்றதுதான் தெரியும். ஆனால், அந்த அம்பு எங்கே விழுந்ததோ?!
மூன்றாம் இளவரசன் அதைத் தேடி பல்வேறு இடங்களில் பல நாட்கள் பயணித்து இறுதியாய் வந்தடைந்ததோ ஒரு சதுப்புநிலவெளி.
அங்கே?
அவன் எய்த கணை இருந்தது. ஆனால், அதை எடுத்து வைத்திருந்ததோ?
ஒரு தவளை. அதன் வாயில் வைத்திருந்தது அவன் செலுத்திய கணை.
"மாட்டேன்"
"ஏன்?"
"நீ என்னை மணந்து கொள்ள வேண்டும்"
"நன்றாயிருக்கிறதே கதை. தவளையை மனிதர் யாராவது மணந்து கொள்வாரோ?!"
"நீதானே உன் தந்தையின் விருப்பப்படி அம்பெய்தினாய். அந்த நிகழ்வின் நோக்கம் யாது?"
"நான் எய்யும் அம்பு எவ்விடத்தில் விழுகிறதோ அவ்விடத்தில்தான் எனக்குரிய மனைவி கிடைப்பாள் என்பதுதான் நோக்கம்!"
"ஆக, அந்த மனைவி உனக்கு நான்தான். எனவே, என்னை மணந்து கொள்"
"விதியை நொந்து கொள்வதை விட வேறு வழியில்லை. சரி, உன்னை மணந்து கொள்கிறேன். வா.. போகலாம்"
*******************************************
தவளைக்கும் மனிதனுக்கும் திருமணம் நடந்தது. மற்ற இரண்டு ராஜகுமாரர்களின் திருமணமோ அனைவருக்கும் ஆனந்தமாய் இருந்தது. அவ்அனைவரோடு சேர்த்து மூத்த ராஜகுமாரர்களின் மனைவியரான இஸ்வரியாவிச்சி, இனுஷ்காரினா இருவரும் கேலியாய்ப் பார்க்கின்றனர்.
சிலநாட்கள் கழித்து ஜார் தமது மகன்களின் மனைவிகளின் கரங்களால் சட்டை ஒன்றை செய்து தரும்படி கேட்கிறார்.
நமது இளவரசன் மனமுடைகிறான். காரணம் கேட்கிறது தவளை. அவன் கூறுகிறான்.
'கவலைப்படாதே. காலையில் தயாராயிருக்கும்' எஎன்று தைரியம் தருகிறது தவளை.
மறுநாள் காலை, மூன்று மகன்களும் தங்கள் தந்தையிடம் தருகின்றனர் தங்கள் தாரங்களின் தயாரிப்புகளை.
முதலிரண்டு மருமகள்களின் அவமதித்துப் புறக்கணிக்கிறார்.
மூன்றாம் மருமகளான தவளை தயாரித்த ஆடையை பாராட்டி மகிழ்கிறார். இதனால், மற்ற மருமகள்கள் பொறாமை கொள்கின்றனர்.

அடுத்து, மருமகள்களை சிற்றுண்டி தயாரித்து வரச் சொல்கிறார் ஜார். மூத்த மருமகள்கள் இருவரும் தயாரித்ததை வெறுக்கிறார் ஜார். தவளை வெற்றி பெறுகிறாள்.
அடுத்து மகன்களையும் மருமகள்களையும் விருந்துக்கு அழைக்கிறார் ஜார். இரு மருமகள்களைவிட தவளையே இதில் முன்நிற்கிறாள். தவளையின் கணவன் நைசாக நழுவி தன் வீட்டுக்கு சென்று தவளையின் ரகசியவுடையை தீயில் கொளுத்துகிறான். விஷயம் தெரிந்து தவளை ராஜகுமாரி கதறி அழுகிறாள்.
தன்னைப் பற்றிய ரகசியத்தைக் கூறி கணவனை விட்டுப் பிரிந்து மாயமாகி விடுகிறாள். கணவன் அவளைத் தேடி அலைகிறான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)