ஒவ்வொரு மொழியிலும் சில சமயங்களில் சொற்களை உச்சரிக்கும்போது ஒரே ஒத்த ஓசையை ஒலிப்பதாக அமைந்துசெவிவழி இடர்பாடுகளை விழையச் செய்வனவாகிவிடும். ஒரு மொழியில் இடம், பொருள், ஏவல் அறிந்தோராயின் இவ்இடரை யூகித்து சரி செய்து கொள்ள முடியும். அதேபோல, தமிழ் மொழியில் ல,ழ,ளகரக உச்சரிப்பு வேறுபாடு அறியாமல் பேசுவோர் நிறைய. இருக்கட்டும்.. நல்லது. இப்போது செவிவழி இடர்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக, தமிழில் கச்சி என்று ஒரு சொல் குறித்து ஈண்டு காண்போம்.
" ஏனுங்க , அவரு எங்கதான் போனார்? " என்று ஒரு நண்பர் கேட்க,
நான் சொல்கிறேன், " அவர், கச்சி ஈசுவரனைக் காண சென்றுள்ளார் " என்று.
எதிர்முனை நண்பரோ அதன் பொருளை இப்படி எடுத்துக் கொள்கிறார் - எண்ணிக் கொள்கிறார் :-
'ஓஹோ.. நம் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன பாக்க போயிருக்கிறாப்ல போலிருக்குது".
உண்மையில் நான் சொல்ல வந்தது ' அவர் "கச்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு போயிருக்கிறார்"
என்பதே.
ஆனால், அந்த நண்பரோ செவிவழி இடர்பாட்டினால்,
' கட்சி' என அரசியல் ரீதியாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார். It is PHONETIC problem ( ஒழிப்புச் சொற்களால் வரும் தொந்தரவு).
ஆக, "வாங்க.. இங்கிலிபீஸை நம் செம்மொழித் தமிழ் உடன் பார்ப்போம் அல்லது கற்போம்".
நல்லது.. Come in back to PHONETIC WORDS.
அன்புடன், கம்கோ சித்தர்
PHONETIC WORDS.
ail - துன்பம் அடை - துயரப்படு
ale - ஒருவகை மது
all - எல்லோரும்
awl - செருப்பை தைப்பவனின் குத்தூசி
alter - மாற்றாக, அதற்குப் பதிலாக
altar -கோவிலில் பலி கொடுக்க அமைக்கப்பட்ட இடம்
arc - நிலவின் பிறை வடிவம், வட்டத்தின் குறுக்கு நெடுக்கான ஆரம்.
ark - படகு அல்லது ஓடம், பெட்டி
aught - ஏதாவது
ought - வேண்டும் அல்லது வேண்டப்படுவது
bate - குறைப்பது அல்லது குறைக்கப்படுவது, தணிப்பது அல்லது தணிக்கப்படுவது
ball - பந்து
bawl - உரக்க கத்து
bark : மரத்தின் பட்டை, நாயின் குரைப்பு
barque - படகு அல்லது பரிசல்
bay - தவிட்டு நிறமுள்ள
bay - வளைகுடாக் கடல்
bay - வாகை மரம்
bay - துரத்துகிற எதிரியை எதிர்த்து நிற்கும் நிலை
bey - துருக்கி தேச நகர மாகாணத் தலைவர்
bell - 🔔மணி
belle - ஆடம்பர பெண்மணி, சொகுசானவள்
belly - அடிவயிறு
bear - சும(ந்து) கொள், சகித்துக் கொள்
bear - கரடி
bare - மூடப்படாத, திறந்த
beach - கடற்கரை
beach - ஒருவகையான பெரிய மரம்
beer - பீர் 🍺 என்ற மது
bier - பிணம் கொண்டு செல்லும் வண்டி
berth - கப்பலிலோ, இரயிலிலோ படுக்கும் இடம்
birth - பிறப்பு
bite - கடி
bight - குடாக்கள்
bough - கிளை (நிறுவனங்கள் சார்ந்தது)
bow - மரியாதை நிமித்தமாக தலை வணங்குதல்
bow - கப்பலின் முன்புறம், வில்
boy - பையன்
buoy - மிதவை
burrow - முயல் வளை
borough - ஊர், நகரம்
borrow - கடன் வாங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக