மிஸ்டர் 'ஙே என தமிழ் வாசகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் எழுத்தாளர் ராஜேந்திர குமார். இயல்பாகவே நம் தமிழ் மொழியில் ஙகர வரிசையில் ங், ங என்ற எழுத்துக்களைத் தவிர பிற எழுத்துகள் சொற்களில் இடம்பெறாது. விதிவிலக்காய் தஞ்சை வட்டார வழக்கில் 'ஙொ'ப்புரானே என்று ஒரு சொல்லாட்சி உண்டு. ஆக, ஙகர வரிசை எழுத்துகளில் 'ஙே' என்ற எழுத்தைப் பயன்படுத்தியவர் ராஜேந்திர குமார். 'ஙே' என்று விழித்தான் என்று விழிப்புநிலையின் ஓர் உணர்ச்சியை வடிவம் அளித்தவர்.
இவரது துப்பறியும் கதாபாத்திரங்கள் ராஜா&ஜெனிபர். இவர்களின் தனியார் துப்பறியும் நிறுவனம் காக்காத்தாள் தெருவில் இயங்குகிறது.
வரமாட்டியா மம்மி நாவல் ராஜேந்திர குமாரின் சிறந்த படைப்பு. இதை நான் பாக்கெட் நாவலில் படித்திருக்கிறேன்.
இக்கதை ஒரு சிறுவன் தன் தாயைப் பிரிந்த ஏக்கத்தைப் பிரதிபலிப்பது. இச்சிறுவனுக்கு துணை ஓர் அன்னப்பறவை. அவ்அன்னம் இவனது தோழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக