திங்கள், 15 செப்டம்பர், 2025

வெற்றுப்படகு /ஓஷோ

சுவாங்தஸூவின் பொன்மொழிகள்

எவன் மனிதர்களை அடக்கி ஆளுகிறானோ அவன் குழப்பத்தில் வாழ்கின்றான். எவன் மற்றவர்களால் அடக்கி ஆளப்படுகின்றானோ அவன் துன்பத்தில் வாழ்கின்றான். இதனால் 'தாவ் (TAO)' வேண்டுவது என்னவெனில் யாரையும் வசப்படுத்த வேண்டாம், யாரினாலும் வசப்பட வேண்டாம். குழப்பத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுபடுவதற்கான வழி ஒன்றுமில்லாத பூமியில் தாவுடன் வாழ்வதாகும்.
******
ஒருவன் படத்தின் மூலம் ஆற்றை கடந்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வெற்றுப் படகு அவனுடைய படகை மோதினால் அவன் எவ்வளவு கெட்ட குணம் உள்ளவனாக இருந்தாலும் அவன் கோபப்பட மாட்டான்.ஆனால், அவன் அந்தப் படகில் யாரேனும் ஒருவன் இருப்பதைப் பார்த்தால் அவன் அந்த படகில் இருப்பவனை பார்த்து படகை சரியாக செலுத்தும்படி கூச்சலிடுவான். 
*****
அவன் கூச்சலிடுவது கேட்கப்படாமல் இருந்தால் அவன் மீண்டும் மீண்டும் கூச்சலிடுவான். அவனைத் திட்ட ஆரம்பித்து விடுவான். இவைகள் எல்லாம் ஏன் நடக்கிறது எனில் எதிரே வந்த படகில் யாரோ ஒருவன் இருக்கிறான். ஆனால், அந்தப் படகு வெற்றுப் படகாக இருந்தால் அவன் கூச்சலிடமாட்டான். அவன் கோபமடைய மாட்டான். நீ உன்னுடைய படகை வெறுமையாக இருக்கச் செய்ய முடியுமானால் இந்த உலக ஆற்றலை கடக்கும் பொழுது உன்னை ஒருவரும் எதிர்க்க மாட்டார்கள். உன்னை ஒருவரும் துன்புறுத்த மாட்டார்கள். 
******
நேராக வளர்ந்துள்ள மரம் தான் முதலில் வெட்டுப்ப்படும். தெளிவான நேர் உள்ள ஊற்றுதான் முதலில் இறைக்கப்படும். நீங்கள் உங்கள் அறிவை மேம்படுத்த விரும்பவும் அறியாதவர்களை வெட்கப்படவும் வைத்தால் மற்றவர்களை விட உங்கள் குணம் பண்பாடு உடையதாக செய்தால் உங்களை சுற்றி ஒரு ஒளி பிரகாசிக்கும். நீங்கள் ஏதோ சூரியனையும் சந்திரனையும் விழுங்கி விட்டது போல நீங்கள் துன்பத்தை தவிர்க்க முடியாது.
******
ஒரு புத்திசாலி சொல்கிறார் 'யார் அவனில் திருப்தி அடைந்து இருக்கிறானோ அவன் மதிப்பற்ற வேலைகளை செய்திருக்கிறான். சாதனை தோல்வியின் துவக்கமாகும். புகழ் அவமானத்தின் ஆரம்பமாகும்.' யார் சாதனை, புகழ் இவைகளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழிறங்கி வந்து இந்த மனித கூட்டத்தில் காணாமல் போவான்.? அவன் 'தாவை' போல் செல்வான், ஒருவருக்கும் தெரியாமல். அவன் எவ்வித பெயரும் இல்லாமல் எவ்வித வீடும் இல்லாமல் வாழ்க்கையின் போக்கிலேயே செல்வான். எளிமையாக இருப்பான். எவ்வித உயர்ந்த ஸ்தானத்தையும் உடையவனாக இல்லாமல் பார்ப்பதற்கு முட்டாளை போல் தோற்றம் அளிப்பான். அவன் காலடிகள் எவ்வித சுவடுகளையும் விட்டுச் செல்வதில்லை. அவனிடம் சக்தி இல்லை. அவன் எதையும் சாதிக்கவில்லை. அவனுக்கு எவ்வித நன்மதிப்பும் கிடையாது. அவன் யாரையும் பற்றி எந்த கருத்தும் கொள்ளாததால், ஒருவரும் அவனைப் பற்றி எதுவும்கருதுவதில்லை. இப்படித்தான் சரியான மனிதன் இருக்கிறான். அவனுடைய படகு வெற்றுப்படகாக இருக்கிறது. 
தாவ்'மனிதன் தான் எவ்வித தடைகளும் இன்றி செயலாற்றுகிறான். அவனுடைய நடவடிக்கைகளால் யாருக்கும் எவ்வித துன்பமும் கொடுப்பதில்லை. இப்படி இருந்தும் தான் இவ்வளவு அன்பாக மிருதுவாக இருப்பதை அவன் தெரிந்திருக்கவில்லை 
*******
அவன் அவன் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவதில்லை. தன்னுடைய வறுமையை மேன்மையான குணமாக ஏற்படுத்திக் கொள்ள மாட்டான்.
*******
அவன் மற்றவர்கள் யாரையும் சார்ந்திராமல் அவன் வழியே அவன் செல்கின்றான். தனியாக நடந்து செல்வதில் அவன் தன்னைப் பற்றி பெருமை கொள்வதில்லை.
*******
தாவ்' மனிதன் யாருக்கும் தெரிந்திராதவனாக இருக்கிறான். நல்ல குணம் எதையும் உண்டாக்குவதில்லை.
********
ஒன்றுமில்லாத சுயமே உண்மையான சுயம். மிகவும் பெரிய மனிதன் ஒன்றுமில்லாத மனிதனாக இருக்கிறான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக